×

கிணறு தோண்டும் பணியை நிறுத்த கோரி மனு

திருப்பூர், டிச.23: உடுமலை அருகே வெடி மருந்து வைத்து கிணறு தோண்டுவதால் வீட்டின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்படுவதுடன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், கிணறு தோண்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக்கோரி அப்பகுதி மக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

இது குறித்து உடுமலை அடுத்த விளாமரத்துப்பட்டி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அடுத்த விளாமரத்துபட்டி கிராமத்தில் குடியிருப்புகளில் இருந்து 100 அடி தூரத்தில் தனியார் தோட்டம் உள்ளது. இங்கு, தற்போது கிணறு வெட்டும் பணி நடந்து வருகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அதிக திறன் உள்ள வெடி மருந்துகள் வைத்து கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்படுகிறது. இது குறித்து ஏற்கனவே, அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வெடி வைத்து கிணறு தோண்டும் பணியை நிறுத்தி வீட்டிற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Tags : drilling ,
× RELATED 720 தெருக்களின் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி